போராட்டம் தொடரும்; மு.கா. தவிசாளர் பஷீர் சேகுதாவூத்

🕔 June 22, 2016

Basheer - 0123பிர­தி­நி­தித்­துவ அர­சி­ய­லி­லி­ருந்து முழுமை­யாக வில­கி­யுள்ளேன் என்­றாலும் மு.காங்கிரசை தூய்மைப்படுத்தும் செயற்­பா­டு­க­ளுக்­கான எனது போராட்டம் தொடரும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தவி­சா­ளரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான பஷீர் சேகு­தாவூத் தெரி­வித்துள்ளார்.

பிர­தி­நி­தித்­துவ அர­சி­ய­லி­லி­ருந்து முழு­மை­யாக விலகிக் கொள்­வ­தா­கவும், என்­றாலும் முஸ்லிம் காங்­கி­ரஸின் அங்­கத்­த­வ­ராக தொடர்ந்தும் இருப்பேன் என்றும் முஸ்லிம் காங்­கி­ரஸின் தவி­சாளர் விடுத்­துள்ள அறிக்கை தொடர்பில் ஊடகமொன்று வினவியபோதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

தன்னுடைய அறிக்கை தொடர்பல் மு.கா. தவிசாளர் பஷீர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்­கையில்;

”நலிந்து கிடக்கும் முஸ்லிம் அர­சி­யலை இளம் பரம்­ப­ரை­யினர் புதிய உத்­வே­கத்­துடன் நிமிர்த்­து­வ­தற்கு வழி­விட்­டி­ருக்­கிறேன். இளம் தலை­மு­றை­யி­ன­ருக்கு வழி­விடும் செயற்­பா­டு­களில் முன்­னோ­டி­யாக இருக்க விரும்­பினேன்.

எனது உயிர்­பி­ரியும் வரை நான் வளர்த்த முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் உறுப்பினராகவே இருப்பேன். கட்­சியை வழி­த­வ­றாது பாது­காக்கும் விட­யத்தில் முன்னிலை வகிப்பேன்.

சம­கால அர­சியல் சூழ்­நி­லையில் முஸ்லிம் தேசிய அடை­யாள அர­சியல் சமூ­கத்தின் பிர­தான அர­சியல் அபி­லா­சையை பலி கொடுக்கும் அள­வுக்கு பெரும் நெருக்கடிகளைச் சந்­திக்கத் துவங்­கி­யி­ருக்­கி­றது.

இவ்­வா­றான கால கட்­டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் இருப்பும் தலைமைகளின் நம்­பகத் தன்­மையும் உறு­திப்­பாடும் இவை­போல இக்­கட்­சியின் உயிர்ப்பும் துடிப்பும் தூய்­மையும் பாது­காத்துப் பேணப்­பட வேண்­டி­யது அத்தியாவசிய­மாகும்.

தற்­போ­தைய அனைத்து அர­சியல் பிர­மு­கர்­களும் சமு­தாய ஈடேற்றம் பற்­றிய பிரக்ஞை­யற்று பத­வி­க­ளையும் சலு­கை­க­ளையும் செள­க­ரி­யங்­க­ளையும் குறி­வைத்தே அர­சி­யலில் ஈடு­ப­டு­கி­றார்கள் என்ற விமர்­சனம் முஸ்லிம் குடிமைச் சமூ­கத்தால் முன்வைக்­கப்­ப­டு­கி­றது.

எனது தனிப்­பட்ட அர­சியல் நம்­ப­கத்­தன்­மையைக் காத்துக் கொள்ளும் வகையில் பிரதி­நி­தித்­துவ அர­சி­யலில் இனி ஒரு­போதும் ஈடு­ப­டு­வ­தில்லை என்ற கடி­ன­மான முடிவுக்கு வந்­துள்ளேன்.

சம­கால முஸ்லிம் அர­சி­யலில் பத­வி­களைப் பெறும் இலக்­கு­க­ளற்ற ஒரு பாத்­தி­ரத்தின் மூலம் செய­லாற்ற முடி­வெ­டுத்­துள்ளேன்.

முஸ்லிம் காங்­கி­ரஸின் உறுப்­பி­ன­ராக தொடர்ந்து இருந்து கட்­சியைத் தூய்மைப்படுத்தும் பணியில் தீவி­ர­மான அர­சியல் செயற்­பாட்­டா­ள­னாக  எனது எஞ்சிய வாழ்நாள் நெடு­கிலும் இருக்க விரும்­பு­கிறேன்.

நான் அர­சி­யலில் பிர­வே­சித்த ஆரம்­ப­கா­லத்­தி­லி­ருந்து இன்று வரை தமிழ், முஸ்லிம் சிறு­பான்மை இனங்­க­ளுக்­கி­டையில் ஒரு பால­மாகச் செயற்­பட்­டுள்ளேன் என்ற மனத்தி­ருப்தி எனக்­கி­ருக்­கி­றது.

எந்­த­வொரு அர­சியல் கட்­சி­யிலும் எவரும் நேர்கோட்டை வரைய முற்படுகின்ற போதெல்லாம் பதவிகளை நாடிய மூன்றாம் தர நடவடிக்கைகளாக அவை சோடித்துக் காட்டப்பட்டு நேரிய மாற்றங்களுக்கான முயற்சிகள் தோற்கடிக்கப்படுகின்றன.

எனவே புறவிமர்சனங்களை சுயவிமர்சனங்களாக மாற்றிக்கொண்டு சோடனைக் குற்றச்சாட்டுக்குள் இருந்து விடுபடுகிறேன்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்