சாய்ந்தமருதில் ஹர்த்தால்

🕔 June 15, 2015

Harthal - saint - 03-எம்.வை.அமீர் –  

சாய்ந்தமருது நகர சபைக் கோரிக்கையை வலியுறுத்தி,  சாய்ந்தமருது பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதோடு, அங்குள்ள வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

‘சாய்ந்தமருது பொதுமக்கள் அமைப்பு’  எனும் பெயரில், சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபைக் கோரிக்கையினை வலிறுத்தி, இன்றைய தினம், அப் பிரதேசத்தில் முழுநாள் ஹர்த்தால் மற்றும் கடையடைப்பு செய்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

சாய்ந்தமருது  பெரிய பள்ளிவாசல், வர்த்தக சங்கம் மற்றும் நிறுவங்கள், பொது அமைப்புகளின் ஒத்துழைப்புடன், இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய தினம் ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளபோதும், போக்குவரத்துக்கள் பாதிப்பிலாத வகையில் இடம்பெற்று வருகின்றன. இதேவேளை – வர்த்தக நிலையங்கள்,  தனியார் நிறுவங்கள் மூடப்பட்டிருந்த போதும், பாடசாலைகள் திறக்கபட்டிருந்தன. ஆயினும், மாணவர்கள் இன்று பாடசாலைகளுக்கு சமூகமளிக்கவில்லை.

இன்று காலை, சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலில் ஒன்றுகூடிய  நகரசபைக் கோரிக்கையாளர்கள் – தொழுகையிலும், பிராத்தனையிலும் ஈடுபட்டதுடன், சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபை பிரகடனம் ஒன்றினை மேற்கொண்டதோடு,  அமைதியான ஊர்வலமொன்றிலும் ஈடுபட்டனர்.Harthal - saint - 02Harthal - saint - 04Harthal - saint - 06

Comments

புதிது பேஸ்புக் பக்கம்