லஞ்சம் பெற்ற பொலிஸ் பொறுப்பதிகாரி கைது

🕔 June 21, 2016
Bribe - 099– அஷ்ரப் ஏ சமத் –

ல்கிசை பொஸிஸ் நிலையத்தின்  குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண்ணொருவரிடம் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில்,  பொலிஸ் விசேட விசாரனைப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டார்.

பெண்ணொருவர், மற்றுமொரு பெண்ணொருவருக்கு எதிராக பொலிஸ்மே நிலையத்தில் மேற்கொண்ட முறைபாடு தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு,  மேற்படி பொலிஸ் பொறுப்பதிகாரி ஒரு லட்சம் ரூபாவினை லஞ்சமாகக் கோரியுள்ளார்.

அதற்கிணங்க, குறித்த லஞ்சத் தொகையின் முற்பணமா 20 ஆயிரம் ரூபாவினை  தெஹிவளை மக்கள் வங்கிக்கு அருகில் வைத்து, குறித்த பெண்னிடமிருந்து, பொலிஸ் பொறுப்பதிகாரி பெற்றுக் கொள்ளும் போது கைது செய்யப்பட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்