ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திகா மீது தாக்குதல்; வைத்தியசாலையில் அனுமதி

🕔 June 18, 2016

Susanthika - 01லிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்னை சுசந்திகா ஜயசிங்க இன்று சனிக்கிழமை கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனது கணவனால் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், இவர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று சனிக்கிழமை அதிகாலை, இவர் மீது இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சுசந்திகாவின் கணவர் – தம்மிக நந்தகுமார கைது செய்யப்பட்டுள்ளார் என்று, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்