பஸில் மற்றும் ரஞ்சித் ஆகியோரிடம் இன்று விசாரணை

🕔 June 17, 2016

Basil+Ranjith - 098முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் ஆகியோர், இன்று வெள்ளிக்கிழமை பாரிய நிதி மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகவுள்ளனர்.

இதற்கான அழைப்பினை மேற்படி ஆணைக்குழு இருவருக்கும் வழங்கியுள்ளது.

பசில் ராஜபக்ஷ அமைச்சராகப் பதவி வகித்தபோது, பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியினை மோசடி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவரிடம் விசாரணை இடம்பெறவுள்ளது.

இதற்காக, அவர் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பஸில் ராஜபக்ஷவிடம் ஏற்கனவே பலமுறை விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.

இதேவேளை, வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித்தும் இன்று ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ரஞ்சித் முதலமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், தனக்கு வழங்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு மேலதிகமாக மூன்று வாகனங்களைப் பயன்படுத்தியதாகவும், அவற்றின் எரிபொருளுக்காக 6.7 மில்லியன் ரூபாவினை செலவிட்டதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவரிடம் விசாரணை இடம்பெறவுள்ளது.

மேலும், தனது பணிக்காக மேலதிக ஊழியர்களை நியமித்து, அவர்களுக்கு 05 மில்லியன் ரூபாவினை சம்பளமாக வழங்கியமை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பிலும், வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் ரஞ்சித்திடம் விசாரணை இடம்பெறவுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்