23 உள்ளுராட்சி சபைகளின் பதவிக் காலம், இம் மாதத்துடன் நிறைவு

🕔 June 17, 2016

Faizer musthafa - 011ள்ளூராட்சி சபைகள் சிலவற்றின் பதவிக்காலம் இம் மாதத்துடன் நிறைவடைவதாக, மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், 23 சபைகளின் பதவிக் காலம் நிறைவடைகின்றன.

சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.

மேற்படி சபைகளின் பதவிக் காலங்களை நீடிப்பதா இல்லையா என்பதை ஜனாதிபதி, பிரதமருடன் பேசி முடிவு செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் என்ற வகையில் எனக்கு இது தொடர்பில் முடிவு எடுக்க முழு அதிகாரம் உள்ள போதும், நல்லாட்சி அரசாங்கம் என்ற வகையில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கருத்துக்களை பெறவுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்