ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு

🕔 June 16, 2016

Law and society Trust  - 01
– அஸ்ஹர் இப்றாஹிம் –

மாகாண மட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஆர்வலர்களுடைய திறமைகளை வலுப்படுத்துவதன் மூலம், நிலைமாற்று நீதி மற்றும் பிரதிநிதித்துவ ஆட்சி ஊடாக, இலங்கையில் நிலையான சமாதானம் மற்றும் தேசிய இணக்கப்பாடொன்றினை ஏற்படுத்துதல் தொடர்பாக, எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள தொடர்ச்சியான செயற்பாடுகள் சம்பந்தமாக விளக்கமளிக்கும் செயலமர்வொன்று இன்று வியாழக்கிழமை அம்பாறை மொன்டி ஹோட்டலில் இடம்பெற்றது.

இந்த செயலமர்வினை Law and society Trust நிறுவனம் ஏற்பாடு செய்து நடத்தியது.

அம்பாறை மாவட்டத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் , தமிழ் மற்றும் சிங்கள ஊடகவியலாளர்கள் பங்கேற்ற மேற்படி செயலமர்வில் Law and society Trust நிறுவனத்தின் சிரேஸ்ட நிகழ்ச்சித்திட்ட உத்தியோஸ்தர் சட்டத்தரணி ஐங்கரன் குஹதாசன் மற்றும் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் சட்டத்தரணி ஸபரா ஸாஹிட் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.

தென் மாகாணத்தில் காலி , மாத்தறை , ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை , மட்டக்களப்பு , திருகோணமலை மாவட்டங்களிலும் வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்திலும் இச் செயல் திட்டத்தினை Law and society Trust நிறுவனம் முன்னெடுத்துச் செல்கின்றது.Law and society Trust  - 04 Law and society Trust  - 02 Law and society Trust  - 03

Comments

புதிது பேஸ்புக் பக்கம்