கைத்தொழில் முயற்சியாளர்களை பதிவு செய்யுமாறு கோரிக்கை

🕔 June 16, 2016

IDB- 0989– றிசாத் ஏ காதர் –

ம்பாறை மாவட்டத்தில் உள்ள கைத்தொழில் முயற்சியாளர்கள், தமது நிறுவனங்களை பதிவு செய்து கொள்ளும்படி, கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பிரதிப்பணிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வாணிப மற்றும் கைத்தொழில் அமைச்சின் பணிப்புரைக்கு அமைவாக இந்த வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

இதற்கிணங்க அரிசி ஆலை, மர ஆலை, நெசவுத்தொழிற்சாலைகள், ஐஸ் உற்பத்திசாலைகள், குடிபான உற்பத்திசாலைகள் மற்றும் பால் சார் உற்பத்தி நிலையங்கள் போன்ற துறைசார் தொழில் முயற்சிகளை பதிவு செய்துகொள்ள வேண்டுமென கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பிரதிப்பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கைத்தொழில் முயற்சியாளர்களின் இனங்கானப்பட்ட பிரச்சினைகளைத் தீர்த்தல், உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தக சமூகத்தோடு உற்பத்தியாளர்களை இணைத்தல், தொழில்முயற்சியாளர்களின் நிதிசார் பிரச்சினைகள் தொடர்பில் நிதி நிறுவனங்களுக்கு எடுத்துரைத்தல், முகாமைத்துவ – தொழிநுட்ப பயிற்சிகளை வழங்குதல் மற்றும் கைத்தொழிலாளர்களின் நிலைத்திருக்கும் தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் எதிர்காலத்தில் கைத்தொழில் பேட்டைகளை உருவாக்குதல் போன்ற விடயங்களை கருத்தில் கொண்டு, இப்பதிவு செய்யும் நடவடிக்கையானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவு நடவடிக்கைகளுக்காக எவ்வித கட்டணங்களும் பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

எனவே, அம்பாறை மாவட்டத்திலுள்ள சகல கைத்தொழில் முயற்சியாளர்களையும் பதிவு செய்து நன்மைபெறுமாறு, கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பிரதிப்பணிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள, அம்பாறை கச்சேரி வீதியில் அமைந்துள்ள கைத்தொழில் அபிவிருத்தி சபையின் காரியாலயத்துக்கு சமூகமளிக்க முடியும்.

அல்லது பின்வரும் தொலைபேசி இலக்கங்களைத் தொடர்புகொண்டு, விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். பிரதிப்பணிப்பாளர்: 0632222405, கைத்தொழில் மேம்படுத்தல் முகாமையாளர்: 0752610770

Comments

புதிது பேஸ்புக் பக்கம்