சீனிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 180 கோடி ரூபாய் பெறுமதியான கொகய்ன் மீட்பு

🕔 June 14, 2016

Cocaine - 0987றக்குமதி செய்யப்பட்ட சீனியுடன் மறைந்து வைக்கப்பட்டிருந்த 100 கிலோகிராம் எடையுடைய கொகய்ன் போதைப் பொருளினை சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சீனிக் கொள்கலன் உள்ளே, மூன்று பயணப் பைகளினுள் இந்த போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.

ஒறுகொடவத்தை கொள்கலன் இறக்குமிடத்தில் வைத்து, குறித்த கொள்கலனை, சுங்கப் பிரிவினர் பரிசோதித்தபோதே, மேற்படி போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 1.8 பில்லியன் (180 கோடி) ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை மேலதிக விசாரணைகளுக்காக போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைத்துள்ளதாக, சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்