ஐந்து மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு; ஆசிரியருக்கு விளக்க மறியல்

🕔 June 9, 2016

Prison - 0978– எப். முபாரக் –

புல்மோட்டை சிங்கள மகா வித்தியாலயத்தில் ஐந்து மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஆசிரியரை, எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குச்சவௌி சுற்றுலா நீதிமன்ற நீதவான் நேற்று புதன்கிழமை உத்தரவிட்டார்.

பொத்துவில் பகுதியைச்சேர்ந்த 40 வயதுடைய ஆசியர் ஒருவருக்கே இவ்வாறு விளக்க மறியல் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

புல்மோட்டை பிரதேசத்திலுள்ள சிங்கள மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும்  14 மற்றும் 15 வயது மாணவிகளை மேற்படி ஆசிரியர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக, 05 பெற்றோர்கள் மூலமாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் புல்மோட்டை பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை முறைப்பாடு செய்திருந்தனர்.

அம்முறைப்பாட்டினையடுத்து, ஆசிரியரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்திய போது, மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உற்படுத்திய சம்பவம் தெரியவந்துள்ளது.

குறித்த ஆசிரியருக்கெதிராக இதுவரைக்கும் 05 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இன்னும் சில மாணவர்களின் பெற்றோர்கள் முறைப்பாடுகளை மாணவிகள் ஊடாக வழங்கி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்