ஆற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு

🕔 June 7, 2016

Body found - 012
– க. கிஷாந்தன் –

வுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் சாமிமலை கவரவில ஆற்றில் இருந்து வயோதிபப் பெண்ணொருவரின் சடலம் இன்று செவ்வாய்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

மஸ்கெலியா – சாமிமலை, கவரவில பீ பிரிவைச் சேர்ந்த வெள்ளையன் பாக்கியம் என்ற 71 வயதுடை வயோதிப பெண் ஒருவரே – இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிரதேச மக்கள் மஸ்கெலியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டனர்.

மேற்படி பெண் இன்று காலை 07 மணியளவில் காணமல் போயிருந்ததாக அவரின் மகன் தெரிவித்தார். எனினும் 8.30 மணியளவில் ஆற்றிலிருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டார்.

மரண விசாரணைகள் இடம்பெற்ற பின்னர், சடலம் நாவலப்பிட்டி சட்ட மருத்துவ அதிகாரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்