வாகனங்களின் விலைகள் அதிகரிப்பு

🕔 May 27, 2016

Vehicles - 012றக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை நேற்று நள்ளிரவு முதல் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரன்சிகே இதனைக் கூறியுள்ளார்.

வாகனங்களின் வரி அதிகரிக்கப்பட்டமையே இந்த விலையேற்றத்துக்கான காரணமாகும்.

இதன்படி 1000 cc இற்கு மேற்பட்ட வாகனங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளின் விலைகளே இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளன.

வேன் மற்றும் லொறிகளின் விலை அதிகரிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டிக்காக வரி மாத்திரம் 04 லட்சம் ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்