‘ஜந்து கண்டங்களின் மண்’ கவிதை நூல் வெளியீடு

🕔 May 27, 2016


– அஷ்ரப் ஏ சமத் –

வெளிநாட்டு அமைச்சின் சிரேஸ்ட பணிப்பாளரும் முன்னாள் ஒஸ்ரியா நாட்டின் துாதுவருமான கல்முனை எச்.ஏ. அசீஸ் எழுதிய ‘ஜந்து கண்டங்களின் மண்’ எனும் கவிதை நூலின் வெளியீட்டு நிகழ்வு நேற்று வியாழக்கிழமை கொழும்பு தமிழ் இடம்பெற்றது.

கவிஞர் டொக்டா் தாசீம் அஹமத் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், அதிதிகளாக பேராசிரியா் எம். ஏ. நுஹ்மான், முன்னாள் அமைச்சா்களான ஏ.ஆர். மன்சூர் மற்றும் பேரியல் அஷ்ரப் ஆகியோர் கலந்து கொண்டனா்.

கவிதை நூல் குறித்து காவியக்கோ ஜின்னாஹ் சரிபுத்தீன், தம்பு சிவா, கலாநிதி சுமதி சிவமோகன்,  சட்டத்தரணி ஏ.எம். பாயிஸ் ஆகியோர் உரையாற்றினாா்கள்.

நுாலின் முதற் பிரதி  ஓய்வுபெற்ற ஆசிரியை திருமதி அபுசாலியிடம் கையளிக்கப்பட்டது.

SAMSUNG CSC

SAMSUNG CSC

Comments

புதிது பேஸ்புக் பக்கம்