01 கிலோவுக்கு மேல் தங்கம் வைத்திருந்த, மஹிந்தவின் முன்னாள் இணைப்புச் செயலாளர் கைது

🕔 May 26, 2016

Champika Karunaratne - 0898முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்னாள் இணைப்புச் செயலாளர் சம்பிக்க கருணாரத்ன, தன்வசம் 1.1. கிலோகிராம் தங்கத்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று புதன்கிழமை, அவருடைய பொரலஸ்கமுவ வீட்டில் வைத்து கைது செய்தனர்.

கடந்த வருடம் நொவம்பர் மாதமும் இவரை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அரச நிதியை மோசடி செய்தாய் எனும் குற்றச்சாட்டில் அப்போது கைது செய்யப்பட்ட இவர் – பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

மேற்படி நபர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் இணைப்புச் செயலாளராகவும் கடமையாற்றியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்