படை வீரர்களை அவமதிப்பதற்கு இடமளிக்க கூடாது; ஹாபிஸ் நஸீரின் செயற்பாடு குறித்து பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் கருத்து

🕔 May 26, 2016

Ruwan wijewardene - 0676தீவிரவாதத்தை இல்லாமல் ஒழிக்க போராடிய படை வீரர்களை அவமதிப்பதற்கு, யாருக்கும் இடமளிக்கக் கூடாதென்று பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் – கடற்படை அதிகாரியொருவரை திட்டியமை தொடர்பில் அமைச்சர் ஊடக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையிலேயே அவர் மேற்கண்ட விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கிழக்கு மாகாண முதலமைச்சர் நடந்துகொண்ட விதத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் அந்த அறிக்கையில் அமைச்சர் சுட்டிக்காட்டி உள்ளார்.

தீவிரவாதத்தை இல்லாமல் ஒழிக்க போராடிய படை வீரர்களை அவமதிப்பதற்கு, யாருக்கும் இடமளிக்கக் கூடாதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, ஒரு பொறுப்புள்ள பதவியிலிருக்கும் அரசியல்வாதி என்ற ரீதியில், பிரச்சினைகள் இருப்பின் அதனை புத்துசாதுரியமான முறையில் தீர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர, இவ்வாறு நடந்துகொள்வது ஏற்றுக்கொள்ளத்தக்க ஒன்றல்லவென்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்