நிவாரணப் பொருட்களுடன் ஜப்பான், இந்திய விமானங்கள் வருகை

🕔 May 21, 2016

Japan+India - 098யற்கை அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கான நிவாரணப் பொருட்களுடன் ஜப்பான் மற்றும் இந்தியாவிலிருந்து இரண்டு விமானங்கள் இலங்கை வந்தடைந்துள்ளன.

மேற்படி விமானங்கள் இன்று சனிக்கிழமை காலை பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்கின.

ஜப்பானிலிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான போர்வைகள், நீர் தாங்கிகள், நீர் சுத்திகரிப்பு சாதனங்கள் மற்றும் மின் பிறப்பாக்கிகள் போன்றவை – குறித்த விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவிலிருந்து வந்த விமானத்திலுள்ள பொருட்கள் இன்னும் இறக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிது.

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்