வெல்லம்பிட்டியில் மீண்டும் மழை; வெள்ளம் இன்னும் வடியவில்லை

🕔 May 21, 2016

Flood - Wellampittaiya - 097
சீ
ரற்ற கால நிலையினால் பாதிக்கப்பட்ட வெல்லம்பிட்டி பிரதேசத்தில்  இன்னும் வெள்ளம் வடியாத நிலையில், இன்று சனிக்கிழமை காலை மீண்டும் மழை பெய்யத் துவங்கியுள்ளது.

இந்த நிலையில்,  இங்குள்ள வீடுகள் இன்னும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையினால் மக்கள் வீதிகளில் அலைமோதிய வண்ணம் உள்ளனர்.

இந்தப் பிரதேசத்தில் தண்ணீர் மட்டம் குறைந்திருப்பதற்கான எந்த அறிகுறியும் காணப்படவில்லை.

இதேவேளை, மெகொட கொலன்னாவ பகுதியில் இருந்து ஒரு முஸ்லிம் குடும்பம் – சிறு குழந்தைகள் சகிதம் காப்பாற்றப்பட்டு வெளியே வந்து, நடு வீதியில் சற்று முன்னர் தஞ்சமடைந்துள்ளது.

படையினரும் தொண்டர்களும் சிறப்பாக பணியாற்றிய வண்ணம் உள்ளனர் என்று, அங்கிருக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

(நன்றி: நௌசாட் முஹிதீன்)Flood - Wellampittaiya - 096
Flood - Wellampittaiya - 098

Comments

புதிது பேஸ்புக் பக்கம்