கோரிக்கை நிராகரிப்பு; மூக்குடைந்த அமைச்சர்கள்

🕔 May 20, 2016

Rejected - 098மைச்சர்கள் இருவர் விடுத்த கோரிக்கையினை ஜனாதிபதியும் பிரதமரும் நிராகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வார அமைச்சரவை கூட்டத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குற்றப் புலனாய்வுத் துறையின் பணிப்பாளர் ரவி விஜேரட்னவையும், நிதி மோசடி தவிர்ப்பு பிரிவின் தலைவர் ரவி வைத்தியலங்காரவையும் அவர்களின் பதவிகளில் இருந்து நீக்குமாறு, மேற்படி அமைச்சர்கள் இருவரும் கோரிக்கை விடுத்தனர்.

எனினும் இதனை ஜனாதிபதியும் பிரதமரும் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்தநிலையில், குறித்த இரண்டு அமைச்சர்களும் நிதிமோசடி குற்றச்சாட்டுக்களில் தொடர்புடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில அமைச்சர்களை அவர்களின் பதவிகளில் இருநது நீக்கவேண்டிய நிலை ஏற்படும் என்று, அமைச்சர் ராஜித சேனாரட்ன ஏற்கனவே தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்