மியன்மார் இன அழிப்பினை கண்டித்து பாலமுனையில் ஆர்ப்பாட்டம்; பிரார்த்தனையும் நிறைவேற்றம்
🕔 June 12, 2015
– ஐ.ஏ. ஸிறாஜ் –
மியன்மார் முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து, பாலமுனை ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு முன்பாக – இன்று வெள்ளிக்கிழமை, ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இன்று ஜும்ஆ தொழுகையினைத் தொடர்ந்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பெருமளவான மக்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது, மியன்மார் முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்படுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோஷங்களை எழுப்பியதோடு, மியன்மாரில் திட்டமிட்டு நடத்தப்படும் இந்த இன அழிப்புக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டுமனவும் கோரிக்கை விடுத்தனர்.
இதேவேளை, மியன்மாரில் பாதிக்கப்பட்ட மக்களின் விமோசனத்துக்காக வேண்டி துஆப் பிராத்தனையும் மேற்கொள்ளப்பட்டது.
பாலமுனை ‘ஹெலோஸ்’ விளையாட்டுக் கழகம் மற்றும் பாலைமுனை கலாசார அபிவிருத்தி மையம் ஆகிய அமைப்புக்கள் ஒன்றிணைந்து, இந்த ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தன.