மியன்மார் இனப் படுகொலைக்கு எதிராக, நாடாளுன்றில் ஹக்கீம் கண்டனம்

🕔 June 12, 2015

Hakeem at parliamentலகில் நடந்த படுபாதக செயல்களில் – மியன்மார் மனிதப் படுகொலையானது மிகவும் பாரதூரமானது என, முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தேரவாத பௌத்த மதம் பின்பற்றப்படும் மியன்மார், இலங்கை போன்ற நாடுகளில் – இவ்வாறான சம்பவங்கள் நிகழ்வது மிகவும் கவலைக்குரியது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம்கள் – அங்குள்ள இன வெறியர்களால் படுகொலை செய்யப்படுவதையும், துரத்தி அடிக்கப்படுகின்றமையினையும் கண்டித்து, இன்று வெள்ளிக்கிழமை மாலை – நாடாளுமன்றத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொண்டுவந்த ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் மீது, கட்சியின் தலைவரும் – அமைச்சருமான ரஊப் ஹக்கீம்
உரையாற்றினார்.

இதன்போதே, அவர் மேற்கண்ட விடயங்களைக் கூறினார். அமைச்சர் ஹக்கீம் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில்,

‘இலங்கை அளுத்கமையிலும் முஸ்லிம்கள் மீது, மிக  மோசமான வன்செயல் இடம்பெற்று – அடுத்த மாதம் ஓராண்டு நிறைவடைகிறது. இவ்வாறான பாரிய இன சுத்திகரிப்பு குற்றச் செயல்களுக்கு, ‘பொறுப்பு வாய்ந்த’ அரசாங்கங்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டாது.

அவுஸ்திரேலியா நோக்கி சென்ற மியன்மார் அகதிகள் நாவூர் தீவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டமையானது கண்டிக்கத்தக்கதாகும்.

இலங்கையின் வெளிநாட்டு அமைச்சானது, மியன்மார் ரோஹிங்ய முஸ்லிம்களின் கவலைக்கிடமான நிலையை கவனத்திற்கொண்டு, ராஜதந்திர ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.

முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். அஸ்லம் ஆரம்பித்து வைத்த இந்த ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் மீது, நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக் மற்றும் வெளி விவகார பிரதியமைச்சர் அஜித் பெரேரா ஆகியோரும் உரையாற்றினர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்