
வவுனியா ஆயிஷா வித்தியாலயத்தில் 2025 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைப் பாராட்டி பரிசு வழங்கும் நிகழ்வும், புதிய ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழாவும் நேற்றுமுன்தினம் (15) பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் பகீரதி பிரதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பொறியியலாளர் றிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, மாணவர்களுக்கான பரிசுகளை வழங்கியதோடு, புதிய ஸ்மார்ட் வகுப்பறையையும் திறந்து வைத்தார்.
கட்சியின் பிரதித் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான முத்து முஹம்மட், கட்சியின் அநுராதபுர மாவட்ட அமைப்பாளரும் பிரதிப் பொருளாளருமான ஏ.ஆர்.எம். தாரிக், கட்சியின் வவுனியா தெற்கு பிரதேச சபை உறுப்பினரும் மஸ்ஜிதுல் அக்ஷா பள்ளிவாசல் பரிபாலன சபைத் தலைவருமான ரஹீம், விவாகப் பதிவாளர் ஜவாஹிர், முன்னாள் அதிபர்களான பய்ஸல் மற்றும் அபூ தாஹீர், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் அன்பஸ் உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மாணவர்களின் கல்வி அடைவுகளை ஊக்குவிப்பதோடு, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கற்றல் சூழலை உருவாக்கும் நோக்கில் இந்நிகழ்வு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




