தலைப்புச் செய்திகள்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக, ஓய்வுபெற்ற நீதியரசர் வி.கே. மலல்கொட நியமனம்

ஓய்வுபெற்ற நீதியரசர் வி.கே. மலல்கொட

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு –

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் ஓய்வுபெற்ற நீதியரசர் வி.கே. மலல்கொட – ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன் ஏனைய உறுப்பினர்களாக எஸ்.வை.எம். கோமஸ், ஏ.எல்.ஏ. அஸீஸ், வைத்தியர் எஸ்.எஸ்.எஸ்.பி.டி.எச். ஜயவர்தன, பேராசிரியர் டி. ஜயசிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க – ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, இன்று (30) பிற்பகல் கையளித்தார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் பதவிக் காலம் நிறைவடைந்தமையினால், வெற்றிடமாக இருந்த பதவிகளுக்கே இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.