தலைப்புச் செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ கைது: கண்ணில் பிளாஸ்டருடன் அழைத்துச் செல்லப்பட்டார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிராந்தி ராஜபக்ஷவை, இன்று (07) காலை, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைது செய்தனர்.

மஹிந்த ராஜபக்ஷ தற்போது தங்கியிருக்கும் கிருலப்பனை வீட்டில் வைத்து, அவர் கைது செய்யப்பட்டார்.

சிரந்தி ராஜபக்ஷ – அரச வங்கியொன்றிலிருந்து ரூ. 10 மில்லியனைப் பெற்று – முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும், பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றங்களைச் செய்ததாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என, ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வைத்திய சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருந்தாதாககக் கூறப்படும் ஷிரந்தி, 05ஆம் திகதி நாடு திரும்பியிருந்தார்.

இதேவேளை, அவரை இம்மாதம்ட 13 ஆம் திகதி நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் (FCID) முன் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஷிராந்தி ராஜபக்சவின் சட்டத்தரணிகள், அவரது கைது நடவடிக்கையைத் தடுக்கும் உத்தரவைக் கோரி, திங்கட்கிழமை (05) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்பிணை மனுவை தாக்கல் செய்திருந்தனர்.