தலைப்புச் செய்திகள்

பேராதனைப் பல்கலைக்கழகம், நாட்டின் முதல்நிலைப் பல்கலைக்கழகமாக தரப்படுத்தப்பட்டுள்ளது

பேராதனைப் பல்கலைக்கழகம் – இலங்கையின் முதல் நிலைப் பல்கலைக்கழகமாகத் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. உலகப் பல்கலைக்கழகத் தரவரிசை மையம் (CWUR) அண்மையில் வெளியிட்ட தர வரிசையின் படி, இந்த இடம் கிடைத்துள்ளது.

கல்விசார் விளைவுகள், பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு, ஆசிரியர்களின் தரம், ஆராய்ச்சி மற்றும் ஒட்டுமொத்த செயல்திறன் உள்ளிட்ட குறிகாட்டிகளின் அடிப்படையில் – இந்தத் தரவரிசைகள் பல்கலைக்கழகங்களை மதிப்பிடுகின்றன.

உலகெங்கிலும் உள்ள 21,291 பல்கலைக்கழகங்களில் பேராதனைப் பல்கலைக்கழகம் 1,695-வது இடத்தைப் பிடித்துள்ளது.

கல்வி மற்றும் ஆராய்ச்சியில் அதன் சர்வதேச அளவிலான செயல்திறனுக்கு, இந்தத் தரவரிசை ஒரு குறிப்பிடத்தக்க அங்கீகாரத்தைக் வழங்குகிறது என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஹார்வர்ட் பல்கலைக்கழகம் உலகளாவிய தரவரிசையில் தனது முதலிடத்தைத் தொடர்ந்தும் தக்க வைத்துக் கொண்டுள்ளது.