
பொது வீதிகளில் அதிகப்படியான இரைச்சலை ஏற்படுத்தும் வகையில், மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர்கள் பொருத்தப்பட்ட வாகனங்களை ஓட்டும் சாரதிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
பொலிஸ் திணைக்களத்தின் போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பாளரும், பிரதிப் பொலிஸ் மா அதிபருமான டபிள்யூ.பி.ஜே. சேனாதீர, அத்தகைய வாகனங்களை பொலிஸார் கைப்பற்றுவார்கள் என்று தெரிவித்தார்.
மேலும், எதிர்காலத்தில் அத்தகைய வாகனங்களின் சாரதிகளுக்கு போதைப்பொருள் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
கைப்பற்றப்படும் வாகனங்களின் சாரதிகளுக்கு எதிராக
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திடம் இருந்து அறிக்கை பெறப்பட்ட பின்னர், நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றும் டி.ஐ.ஜி செனதீர மேலும் கூறினார்.

“மக்கள் தனிப்பட்ட பயன்பாட்டிற்குப் பதிலாக, சாகசங்கள் மற்றும் பிற செயல்பாடுகளுக்காக மோட்டார் சைக்கிள்களை வாங்குவதாகக் காணப்படுகிறது. மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் இரண்டிலும் மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர்கள் பொருத்தப்பட்டு, குறிப்பாக பண்டிகைக் காலங்களில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கின்றன” என்றும் அவர் கூறினார்.
மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர் அமைப்புகளைக் கொண்ட வாகனங்களால் ஏற்படும் வீதிப் பாதுகாப்பு மற்றும் பொது இடையூறு குறித்த கவலைகள் அதிகரித்து வரும் வேளையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி நபர்களுக்கு எதிராக, எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கை அமல்படுத்தப்படும் என்று எச்சரித்த டி.ஐ.ஜி சேனாதீர, இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.


