
கோதுமை மாவின் விலையை பிரிமா நிறுவனம் இன்று (29) தொடக்கம் அதிகரித்துள்ளது.
அதிகரித்து வரும் போக்குவரத்துச் செலவுகளைக் காரணம் காட்டி, இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு கிலோகிராம் பிரிமா மில்க் பிராண்ட் மாவின் விலை 05 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய சில்லறை விலை ரூ. 220-லிருந்து ரூ. 225-ஆக உயர்ந்துள்ளது.
அதிகரித்த போக்குவரத்துச் செலவுகள் காரணமாக இந்த விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


