
முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகர 83-வது வயதில் காலமானார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் தந்தையான மஹிந்த விஜேசேகர, 1989 முதல் 2010 வரை மாத்தறை மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். இதன்போது பல அமைச்சர் பதவிகளையும் வகித்துள்ளார்.
2009-ஆம் ஆண்டில், அக்குரெஸ்ஸாவில் நடைபெற்ற ஒரு மத நிகழ்வைக் குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் மஹிந்த விஜேசேகர படுகாயம் அடைந்தார். அவர் அந்தத் தாக்குதலில் இருந்து உயிர் தப்பியபோதிலும், அச்சம்பவத்தைத் தொடர்ந்து நீண்டகால உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டார்.

தென் மாகாணத்தின் மூத்த அரசியல்வாதியான மஹிந்த விஜேசேகர, இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக உள்ளூர் மற்றும் தேசிய அரசியலில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.


