
நாட்டில் ஏற்பட்ட பாதகமான வானிலையைத் தொடர்ந்து, 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைகள் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், திருத்தப்பட்ட பரீட்சை அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி நடக்காத பரீட்சைப் பாடங்கள் ஜனவரி 12 முதல் 20 ஆம் திகதி வரை நடத்தப்படும்.

பரீட்சைகளை சீராக நடத்துவதை உறுதி செய்வதற்காக நாடு தழுவிய ஏற்பாடுகள் நடந்துள்ளன.
இது தொடர்பில் மேலதிக தகவல்களுக்கு: 1911 | தொலைபேசி: 0112784537, 0112786616, 0112784208 | தொலைநகல்: 0112784422 | மின்னஞ்சல்: gcealexam@gmail.com


