தலைப்புச் செய்திகள்

நாட்டில் 09 லட்சம் வீடற்ற குடும்பங்கள் உள்ளன: அமைச்சர் சுனில் ரணசிங்க

AI உருவாக்கிய படம்

நாட்டில் சுமார் 09 லட்சம் வீடற்ற குடும்பங்கள் இருப்பதாக வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் டொக்டர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக 100,000 புதிய குடும்பங்கள் இந்தத் தொகையில் இணைவதாகவும் அவர் குறிப்பிட்டார். இது விலை குறைவான வீடுகளுக்கு அதிகரித்து வரும் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தக் குடும்பங்கள் வீட்டு உரிமையை அடைய உதவும் வகையில் பல திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், சொந்தமாக வீடு கட்ட முடியாத குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு தற்போதுள்ள வீட்டு உதவித் திட்டங்களை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.