தலைப்புச் செய்திகள்

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த வெலிகம பிரதேச சபை தவிசாளர் மரணம்

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர – துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார் என, அததெரண செய்தி வெளியிட்டுள்ளது.

‘மிடிகம லாசா’ என்றும் அழைக்கப்படும் லசந்த விக்ரமகேர – இன்று (22) காலை அடையாளம் தெரியாக இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார்.

பிரதேச சபையில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்தபோது – துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள், தவிசாளரின் கையொப்பம் பெற வந்ததாகக் கூறி பிரதேச சபை வளாகத்திற்குள் நுழைந்ததாக தெரியவந்தது.

காயமடைந்த பிரதேச சபைத் தவிசாளர் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட்ட நிலையில் உயிரிந்துள்ளார்.