
கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் 09 கிலோ 555 கிராம் குஷ் போதைப்பொருள் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிராண்ட்பாஸ் ‘சிறிமுத்து உயன’ வீட்டுத் திட்டத்துக்கு அருகில் கொழும்பு குற்றப்பிரிவின் (சிசிடி) அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது, இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
இதன்போது, கொழும்பு 14இல் வசிக்கும் 27 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டு தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து, கொழும்பு குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை தொடங்கியுள்ளது.


