தலைப்புச் செய்திகள்

ஈஸ்டர் தாக்குதலின் முக்கிய சதிகாரர் அடையாளம் காணப்பட்டுள்ளார்: பாதுகாப்பு அமைச்சரின் செயலாளர் கூறியதாக நிசாம் காரியப்பர் தெரிவிப்பு

ஈஸ்டர் தின குண்டுவெடிப்புத் தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்த முக்கிய சதிகாரர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன தெரிவித்தார் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

உயர் பதவிகளுக்கான குழுவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன – இதனைக் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் X பதிவில் ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“உயர் பதவிகளுக்கான குழுவில், எனது கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, ரவி செனவிரத்ன; ‘ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னணியில் இருந்த முக்கிய சதிகாரரை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்’ என்று கூறினார்” என, நாடாளுமுன்ற உறுப்பினர் நிசாம் காரியப்படர் தெரிவித்தார்.