
தங்க பிஸ்கட்களை கடத்த முயன்றபோது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நபரொருவர் கைது செய்யப்பட்டதாக இலங்கை சுங்கத்துறை தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதி 210 மில்லியன் ரூபாய்க்கும் அதிக தொகையாகும்.
இலங்கை விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் நிறுவனத்தின் ஊழியர் ஒருவரே – இவ்வாறு கைதாகியுள்ளார்.
54 வயதான சந்தேக நபர், 5.94 கிலோ எடையுள்ள 24 கரட் தங்க பிஸ்கட்களை விமான நிலையப் பணியாளர் வெளியேறும் வாயிலினூடாக கடத்த முயற்சித்த வேளையில் கைது செய்யப்பட்டார்.

குறிந்த தங்க பிஸ்கட்கள் சந்தேக நபருடைய காலுறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டன.



