தலைப்புச் செய்திகள்

ஒரேயடியாக பெருந்தொகையால் உயர்ந்தது தங்க விலை

ங்கத்தின் விலை இன்று (08) இலங்கையில் 5,000 ரூபாயினால் அதிகரித்துள்ளது.

அதன்படி, புறக்கோட்டை தங்க சந்தையில் 22 கரட் தங்கத்தின் விலை 271,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.

சந்தை தரவுகளின்படி, கடந்த சனிக்கிழமை – தங்கத்தின் விலை 266,400 ரூபாயாக இருந்தது.

இதேவேளை, கடந்த சனிக்கிழமை 288,000 ரூபாயாக இருந்த 24 கரட் தங்கத்தின் விலை 293,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.