
மாளிகாவத்தைதையில் இன்று (03) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
வணிக வளாகத்தில் இருந்த இளைஞர் ஒருவரை குறிவைத்து – மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் வீதியில் – இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞர், சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் ரி56 துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.



