தலைப்புச் செய்திகள்

துப்பாக்கி ரவைகள் அடங்கிய பை, கிணற்றிலிருந்து கண்டெடுப்பு

கைவிடப்பட்ட கிணறு ஒன்றிலிருந்து 1,393 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – கொடிகாமம் பகுதியில், பல ஆண்டுகளாக கைவிடப்பட்ட நிலையில் இருந்த கிணற்றை துப்புரவு செய்யும் போது, பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகள் நேற்று (19) கண்டுபிடிக்கப்பட்டதாக, கொடிகாமம் பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த துப்பாக்கி ரவைகள் கறைபிடித்துள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது. சண்டை நடைபெற்ற காலத்தில் இவை கிணற்றில் போடப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

துப்பாக்கி ரவைகள் அடங்கிய பை – சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.