
ஜனாதிபதி நிதியிலிருந்து அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மகன்கள் மற்றும் உறவினர்கள் பயனடைந்துள்ளதாக அமைச்சர் அனுர கருணாதிலக்க இன்று (05) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில் 2005 முதல் 2014 வரை பயன்படுத்தப்பட்டதாகவும், அவர் தனது உரையின் போது கூறினார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நெருக்கமான – பின்வரும் நபர்கள் ஜனாதிபதி நிதியத்திலிருந்து பயனடைந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
- ஹர்ஷன சுபுன் ராஜகருணா (நாடாளுமன்ற உறுப்பினர்) – கம்பஹா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் சந்திர ராஜபகருணாவின் மகன்
- ஐ.என். கொடிதுவக்கு (2006ஆம் ஆண்டு) – கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கருணாசேன கொடிதுவக்குவின் உறவினர்
- திருமதி வி. ராதாகிருஷ்ணன் (2006) – தேசியப் பட்டியல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி. ராதாகிருஷ்ணனின் மனைவி
- தினேஷ் தொடங்கொட (2006ஆம் ஆண்டு) – அரசியல் தொடர்புகள் மூலம் பெற்றுக் கொண்டார்.
- கே.கே. பரணவிதான (2006)

மேலும், புலமைப்பரிசில்களுக்கான பணம் எவ்வளவு, எத்தனை பேருக்கு வழங்கப்பட்டது என்பதையும் அமைச்சர் வெளிப்படுத்தினார்;
- 2005 ஆம் ஆண்டில் ரூ. 73 மில்லியன்
- 2006 ஆம் ஆண்டில் ரூ. 75 மில்லியனுக்கும் மேல்
- 2007 ஆம் ஆண்டில் 42 நபர்களுக்கு ரூ. 33 மில்லியனுக்கும் மேல்
- 2008 ஆம் ஆண்டில் 18 நபர்களுக்கு ரூ. 11 மில்லியனுக்கும் மேல்
- 2009 ஆம் ஆண்டில் நான்கு நபர்களுக்கு ரூ. 03 மில்லியனுக்கும் மேல்
- 2010 ஆம் ஆண்டில் மூன்று நபர்களுக்கு ரூ. 03 மில்லியனுக்கும் மேல்
- 2011 ஆம் ஆண்டில் இரண்டு நபர்களுக்கு ரூ. 01 மில்லியனுக்கும் மேல்
- 2012 ஆம் ஆண்டில் 02 நபர்களுக்கு ரூ. 03 மில்லியனுக்கும் மேல்
- 2014 ஆம் ஆண்டில் ஒரு நபருக்கு ரூ. 400,000 க்கும் மேல்


