தலைப்புச் செய்திகள்

Nest International Pvt Ltd நிறுவனத்துக்கு விருது: இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா வழங்கி வைத்தார்

இலங்கை மென்பொருள் சேவை நிறுவனங்களுக்கான சங்கமான SLASSCOM ஏற்பாடு செய்த SLASSCOM Ingenuity Awards 2025 தேசிய விருது விழாவில், Nest International (Pvt) Ltd நிறுவனம் 𝐁𝐞𝐬𝐭 𝐒𝐭𝐚𝐫𝐭-𝐮𝐩 பிரிவில் முதலிடத்தை வென்றுள்ளது.

தொழில்நுட்பம், கல்வி, வர்த்தகம், வேலைவாய்ப்பு, மற்றும் புதுமை சார்ந்த கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் நோக்கில் ஆண்டு தோறும் நடத்தப்படும் இவ்விழா, கொழும்பு தாஜ் சமுத்திரா நட்சத்திர ஹோட்டலில் – அண்மையில் நடைபெற்றது.

Nest International Pvt Ltd நிறுவனத்தின் ஸ்தாபகரான பொறியியலாளர் நஸார் முகம்மட் சப்னாஸ் மற்றும் நிர்வாக ஆலோசகரான என்.ஜே. ஸெரோன் அனஸ் ஆகியோர் இந்த விருதை, விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவிடமிருந்துபெற்றுக் கொண்டனர்.

இந்த விருது வழங்கும் விழாவில், 1996 உலகக் கோப்பை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் அரவிந்த டி சில்வா, SLASSCOM நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நிஷான் மெண்டிஸ், மற்றும் பல முன்னணி நிறுவனங்களின் நிர்வாகப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில், பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள், தனியார் மற்றும் பொது மென்பொருள் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலுள்ள போட்டியாளர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

SLASSCOM இன் மூலமாக, இளம் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் புதுமை யோசனையாளர்கள் நாடு முழுவதும் தொழில்துறையின் வளர்ச்சிக்காக பங்களிக்க வழிவகை செய்யப்படுகிறது.

Nest International Pvt Ltd நிறுவனத்தின் இந்த வெற்றி, இளம் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும் முன்மாதிரியாகவும், கிழக்கு மாகாண இளைஞர்களுக்கான ஒரு பிரதான முன்னுதாரணமாகவும் அமைந்துள்ளது.