
மித்தெனிய – தொரயாய பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு இளைஞர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இறந்த இளைஞர்கள் 25 மற்றும் 30 வயதுடையவர்களாவர். இன்று (25) காலை அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
குற்றம் நடந்த இடத்திற்கு அருகில் ஒரு கைத்துப்பாக்கியில் இருந்து 5 தோட்டாக்கள் மற்றும் இறந்தவர்களின் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
மித்தெனியா பொலிஸாருடன் இணைந்து – மூன்று பொலிஸ் குழுக்கள் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றன.



