
முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனுராதபுரம் மாவட்ட அமைப்பாளருமான துமிந்த திசாநாயக்க இன்று (23) கைது செய்யப்பட்டுள்ளர்.
ஹெவ்லொக டவுனில் உள்ள ஒரு முக்கிய அடுக்குமாடி குடியிருப்பில் செவ்வாய்க்கிழமை (20) தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கியின் உரிமை குறித்து பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு மேற்கொண்ட விசாரணை தொடர்பாக இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டது.
துமிந்த திசாநாயக்கவை பொலிஸார் இன்று கைது செய்தனர்.
வெள்ளவத்தை ஹெவ்லொக் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவரிடம் இருந்து மீட்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
என்ன நடந்தது?
வெள்ளவத்தை பொலிஸார் கடந்த 20 ஆம் திகதி அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவருக்குச் சொந்தமான பயணப்பொதியில் இருந்து இந்தத் துப்பாக்கியை பொலிஸார் மீட்டனர்.
அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் பின்புறத்தில் குறித்த T-56 துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டதாக அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் பொலிஸாருக்குத் தகவல் அளித்திருந்தார்.
அதன்படி, இந்த சம்பவம் தொடர்பாக 69 வயதுடைய பெண் ஒருவரும், அவரின்ட மருமகளான கஜகஸ்தான் நாட்டவரும் கைது செய்யப்பட்டனர்.
கல்கிஸ்ஸை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில் அவர்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறார்கள்.



