தலைப்புச் செய்திகள்

வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிராகரிப்பு

உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 20 மனுக்களை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

மேற்படி மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பல அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் தங்கள் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து மேற்படி மனுக்களை தாக்கல் செய்திருந்தன.

தொடர்பான செய்தி: நிராகரிக்கப்பட்ட மேலும் 35 வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு உத்தரவு