தலைப்புச் செய்திகள்

தேசபந்துவை பதவி நீக்கம் செய்வதற்கான குழுவை நியமிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

வறான நடத்தை மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றில் ஈடுபட்டமை காரணமாக காரணமாக, தேசபந்து தென்னகோனை – பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவை நியமிப்பதற்குரிய தீர்மானம் இன்று (08) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக 151 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர், யாரும் எதிராக வாக்களிக்கவில்லை.

தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர இந்த பிரேரணையை முன்வைத்தார்.

லக்மாலி ஹேமசந்திர பிரேரணையை முன்வைத்து பேசுகையில்; தவறான நடத்தை மற்றும் பதவி துஷ்பிரயோகம் காரணமாக தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்க விசாரணைக் குழுவை நியமிக்க வேண்டும் என்று முன்மொழிந்தார்.

அதன்படி, 2002 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க அதிகாரிகளை நீக்குதல் (நடைமுறை) சட்டத்தின் பிரிவு 5 இன் கீழ், தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவை நியமிப்பதற்கான தீர்மானம், அந்தச் சட்டத்தின் பிரிவு 5 உடன் – படிக்கப்படும் பிரிவு 3(d) மற்றும் 3(e) இன் கீழ், அவரது பதவியின் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததற்காகவும், தவறான நடத்தைக்காகவும், அவரை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில் விவாதம் இல்லாமல் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தேசபந்து தென்னகோன் தற்போது விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தொடர்பான பதிவு