தலைப்புச் செய்திகள்

தபால் மூல வாக்களிப்புக்காக 07 லட்சம் விண்ணப்பங்கள்

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல்களில் தபால் வாக்களிப்புக்காக தேர்தல் ஆணைக்குழு கிட்டத்தட்ட 07 லட்சம் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது.

தபால் மூலம் வாக்களிக்கத் தகுதியுடையவர்களுகள் அதற்காக விண்ணப்பிப்பதற்கான காலம் – மார்ச் 03ஆம் திகதி தொடங்கி மார்ச் 17ஆம் திகதி நிறைவடைந்தது.

இதேவேளை, தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்ட அரச அதிகாரிகள் பற்றிய தகவல்களைத் தொகுக்கும் செயல்முறை நிறைவடையும் நிலையில் இருப்பதாகவும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இன்னும் தங்கள் விவரங்களைச் சமர்ப்பிக்காத அரச அதிகாரிகள் உடனடியாக அதனைச் செய்யுமாறு தேர்தல் ஆணையர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கேட்டுக்கொண்டுள்ளார.

அத்தகைய அதிகாரிகள் தங்கள் தகவல்களை, தங்கள் நிறுவனத் தலைவரின் பரிந்துரைகளுடன், அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.