தலைப்புச் செய்திகள்

துப்பாக்கிச் சூட்டில் 35 வயது நபர் பலி: மினுவாங்கொட பிரதேசத்தில் சம்பவம்

மினுவாங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜபலவத்த பகுதியில் இன்று (07) நபரொருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த 35 வயதுடைய நபர் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி சூட்டுக்குள்ளான கல்லொலுவ பிரதேசத்தைச் சேர்ந்த நபர், மினுவாங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. சம்பவம் குறித்து மினுவாங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் பாருங்கள்