தலைப்புச் செய்திகள்

உள்ளூராட்சித் தேர்தல் ஏப்ரலில்: உறுதிப்படுத்தினார் அமைச்சரவைப் பேச்சாளர்

உள்ளூராட்சித் தேர்தல்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ உறுதிப்படுத்தினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இன்று (28) கலந்து கொண்டு பேசுகையில் அவர் இதனைக் கூறினார்.

உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவது தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஏற்கனவே சபாநாயகருக்குக் கிடைத்துள்ள என்றும், விரைவில் நாடாளுமன்றத்துக்கு அது அறிவிக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சித் தேர்தல்களைத் தொடர்ந்து மாகாண சபை தேர்தல்களை நடத்துவது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.