தலைப்புச் செய்திகள்

மேற்கு கரையில் இஸ்ரேல் தாக்குதலில் 10 பேர் பலி: காஸாவில் இடிபாடுகளில் இருந்து 120 உடல்கள் மீட்பு

க்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை நகரமான ஜெனின் மீது – இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலில் குறைந்தது 10 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய ராணுவ சோதனைச் சாவடிகள் மற்றும் வாயில்களின் எண்ணிக்கை 898 ஆக உயர்ந்துள்ளதாக பலஸ்தீன அரசாங்க அமைப்பொன்று சுட்டிக்காட்டியுள்ளது..

இது இவ்வாறிருக்க, போர் நிறுத்த ஒப்பந்த விதிமுறைகளை மீறி காஸா நகர கடற்கரையை நோக்கி – இஸ்ரேலிய துப்பாக்கிப் படகுகள் ஷெல் தாக்குதல் நடத்தியதாக அல் ஜசீரா அரபிக் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

இதேவேளை, காஸாவில் அழிக்கப்பட்ட கட்டிடங்களின் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து கடந்த இரண்டு நாட்களில் 120 சிதைந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக சிவில் பாதுகாப்பு ஊழியர்கள் கூறியுள்ளனர்.

இஸ்ரேலின் முற்றுகை நீக்கப்பட்ட பின்னர் – காஸா பகுதிக்குள் நேற்று செவ்வாய்கிழமை உதவிப் பொருட்களுடன் கிட்டத்தட்ட 900 லொரிகள் நுழைந்ததாக ஐ.நா.வின் மனிதாபிமான நிறுவனம் தெரிவித்துள்ளது.