தலைப்புச் செய்திகள்

தனித்துப் போட்டியிடுதவற்கு மு.காங்கிரஸ் முடிவு

– நூருல் ஹுதா உமர்-

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது – கொழும்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச் சின்னத்தில் தனித்து போட்டியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகத்தில் நேற்று (21) மலை நடைபெற்ற கட்சியின் கொழும்பு மாவட்ட மத்திய குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் – நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கட்சியின் செயலாளர் – ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், எம்.எஸ். உதுமாலெப்பை, எம்.எஸ். நழீம் மற்றும் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் – மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் அர்ஷாத் நிஸாம்தீன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற கூட்டத்தில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலையை மையப்படுத்தி  நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதன் பின்னர் – கொழும்பு, தெஹிவளை-கல்கிஸ்ஸ, கோட்டே, மொரட்டுவை, கொலன்னாவ மாநகர சபைகளுக்கும், கொடிகாவத்தை-முல்லேரியா போன்ற பிரதேச சபைகளுக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவது என்ற முடிவை தலைவர் அறிவித்ததோடு, அடுத்த கட்ட நடவடிக்கைகளை கட்சி உடனடியாக ஆரம்பிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.