
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரள நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்த நியமனத்தை வழங்கியுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த தலதா அத்துகோரள, கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தனது ஆதரவை வழங்கினார்.



