தலைப்புச் செய்திகள்

சட்ட விரோத மின்சார வேலிகளால் 50 யானைகள் உயிரிழப்பு: தடுப்பதற்கு அழைப்பு

மின்சார வேலிகள் அல்லது சட்ட விரோதமாக கம்பி வேலிகளுக்கு மின்சாரம் வழங்கியமை காரணமாக 50 யானைகள் இந்த வருடத்தின் இதுவரையிலாான காலப்பகுதியில் இறந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இச்சட்டவிரோதச் செயல் தொடர்பாக ஏற்கனவே பல்வேறு தகுந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள இலங்கை மின்சார சபை, காட்டு யானை வளங்களைப் பாதுகாக்க பொதுமக்களின் ஆதரவை கோரியுள்ளது.

“வேலிகள் அல்லது கம்பிகளுக்கு மின்சாரம் வழங்குவது தொடர்பாக உங்களிடம் தகவல்கள் இருக்குமாயின், உடனடியாக 0112 118 767 அல்லது1987 எனும் இலங்கங்களுக்கு தொலைபேசி மூலம் அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்’ என, மின்சார சபை அறிவித்துள்ளது.

‘காட்டு யானை வளத்தைப் பாதுகாப்பதில் எங்களுடன் சேர உங்களை அழைக்கிறோம். பண்டைய காலங்களிலிருந்து யானகள் மத மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் ஈர்க்கப்பட்டு நேசிக்கப்படுகிறது, மேலும் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த பங்களிக்கிறது’ எனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.