நீள்கிறது பட்டியல்: பஸில் ராஜபக்ஷவுக்கு எதிராக மற்றுமொரு குற்றச்சாட்டு

🕔 February 14, 2016

Basil - 976லங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் 5.22 மில்லியன் ரூபா நிதியினை, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ முறைகேடாகப் பயன்படுத்தியதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஊவா மாகாணசபைத் தேர்தலின் போது, ஐ.ம.சு.முன்னணியை விளம்பரப்படுத்தும் வகையில் 8000 ரி – ஷேட்களை கொள்வனவு செய்து, அவற்றில் வாசகங்களை அச்சிடுமாறு சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கு பஷில் உத்தரவிட்டிருந்தார். மேற்படி நடவடிக்கைக்கு 5.22 மில்லியன் செலவாகியுள்ளது.

உலக சுற்றுலா தினம் எனும் பெயரிலேயே இந்த ரி – ஷேட்கள் அச்சிடப்பட்டுள்ளன.

இதேவேளை, மேற்படி தேர்தல் காலத்தின்போது இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களும் ஐ.ம.சு.முன்னணியினை விளம்பரப்படுத்தும் பொருட்டு பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் 25.29 மில்லியன் ரூபாய் பணம், பஸில் ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில், முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இவ்விவகாரம் தொடர்பில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவிக்கையில்; முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ மேற்கொண்ட மேற்படி மோசடி தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகக் கூறினார்.

இதேவேளை, குறித்த விசாரணைகளின் அறிக்கைகள் – பாரிய நிதி மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்